மாறவேண்டும் எல்லாமும்
மாற்றம் உன்னிடம் இருந்தே
தொடங்க வேண்டும்........
உன்னை நீ மாற்றிக்கொள்ளாமல்
மற்றவரை குறை சொல்வதில்
பயனொன்றும் விளையப் போவதில்லை.
கையூட்டு கொடுக்காமல்
உன் காரியங்களை வெல்லப்பார்!
லஞ்சம் அஞ்சி ஓடும்......
நீ மற்றவருக்கு செய்யும் உதவி
பிறவியின் பலன் - பிறருக்காக
பலனை எதிர்பார்க்காமல் உதவு...
மற்றவருக்கு முன் உதாரணமாய்
வாழ்க்கையை அமைத்துக்கொள்
பயணம் செய் உன் பாதையில்...
லட்சிய வேள்வியில் நிச்சயம்
வெல்வாய்! உனக்குப் பின்னால்
அணிவகுக்கும் சேனைகள்...
வையத்தலைமை தேடிவரும்
வான்புகழ் மாலையிடும்
வாழ்க்கை வசந்தமாகும்...