திங்கள், 6 ஜூன், 2011


தெருக்களில் இறைந்து கிடக்கும் குப்பைக்கும் ஓடும் சாக்கடை நீருக்கும் 
நாம் பொறுப்பில்லை, அரசுதான். குப்பைகளை தெருக்களில் வீசுவது மட்டுமே 
நம் வேலை! தெருவை சுத்தமாக வைத்துக் கொள்வதில் இல்லை. வோட்டு போட்டு இருக்கோம்ல. கவருமெண்டுதான் நமக்கு வேண்டிய எல்லாம் செய்யணும். 

பஸ்ஸின் ஜன்னல் ஓரம் சீட் வேண்டும். அடம்பிடித்தாவது இடம் பிடிப்போம். பான்பராக் போட்டு எச்சிலை துப்ப. நமக்கு பின்னால் இருப்பவன் மீது எச்சிலை  பன்னீராய் தெளிப்போம். யார் தட்டிக்கேட்பது? நாம யாரு? எவ்வளவு பெரிய ஆளு? கேட்டுவங்களா? 

தெருக்குழாயில்  தண்ணீர் வருகிறதோ இல்லையோ சண்டைவரும். சண்டையிட்டால்தான் குடம் நிரம்பாவிட்டாலும் நம் மனம் நிரம்பும். நாலு வார்த்தையாவது எதிரியின் குடும்பத்தை நாறவார்த்தைகளால் திட்டவேண்டும். குடும்பமே நமக்கு சப்போர்ட் செய்யணும். என்ன நாம வீர பரம்பரையில்லையா?

இதையெல்லாம் செய்யறவங்க நல்லா படிச்சவங்கதான். தன்னலம் மட்டுமே குறிக்கோளா கொண்டவங்க. அப்பறம் எப்படிங்க நாடு முன்னேறும்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக