வியாழன், 26 ஜனவரி, 2012


உயிராய் உன்னை நினைத்து
உருகுகிற என்னை விட்டு
யாரோ ஒருவனுடன்
பகிர்ந்து கொள்ளப்படும்
உன் வெற்றியும்  புன்னகையும்
எனக்குள் ஓர் வெற்றிடத்தை
ஏற்படுத்தியதால் துளிர்த்தது
உன் மீதான வெறுப்பு.

நீ சிரித்ததையும் அவன் ரசித்ததையும்
என்னிடம் அவன் விவரித்தபோது
என்னுள் ஏற்பட்டது இன்னும் வெறுப்பு.

என்னை நேசிப்பதாய்
அவனிடம் நீ சொன்னதை
மறைத்து அவன் ரசித்ததை
இன்னும் நீ உணரவில்லை....

உன்னிடம் இருக்கும்
குழந்தைத்தனம் காணும்போது
எங்கேயோ தொலைந்து விடுகிறது...
உன் மீதான வெறுப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக