என்னுயிரே....
இளமைகால மழை நாட்களை
மறக்க முடிவதில்லை
உன்னுடன் கைகோர்த்து
மாலை மயங்கும் வேளையிலே
மழைக்கால நாள் ஒன்றில்
சோளகொள்ளை பாதையிலே
சேர்ந்து நாம் போகையிலே...
கொட்டியது மழை....
வெட்டியது மின்னல்...
ஒவ்வொரு மின்னலின் போதும்
உன் முகம் மின்னியது
மின்னலை விட பிரகாசமாய்...
பயத்தில் நீ அழ முயற்சிக்க
ஆறுதல் கூற வார்த்தைகள் தேடினேன்...
அழகாய் நீ சொன்னாய்
மின்னலும் இடியும்
உன்னிடமிருந்து என்னை
பிரித்துவிடும் என
பயத்தில் அழ முயன்றதாய்....
ஆழமான உன் காதலால்
அடிமையானேன்....
வீட்டோடு சிறைப்பட்டு
விடியவிடிய கண்ணீர்விட்டு
வேதனையில் நீ வெம்பியதை
அறிந்து துடித்து - பின்
கொட்டும் மழை சாரலிலும்
கோதை உன் முகம் கண்டு
ஆறுதல் கூறி ஆறுதல் பெற
நான் வந்த வேளையில்
நிகழ்ந்த ஒரு கொடுமை
நம் காதலை பிரித்தது...
என்னுயிரை காக்க நம் காதலை
தியாகம் செய்த தியாகி நீ....
மழைகாலம் - பிரிந்த
நம் காதலுக்கு
சாட்சியாக இன்னும்
அழுதுகொண்டுதான் உள்ளது...
இளமைகால மழை நாட்களை
மறக்க முடிவதில்லை
இளமைகால மழை நாட்களை
மறக்க முடிவதில்லை
உன்னுடன் கைகோர்த்து
மாலை மயங்கும் வேளையிலே
மழைக்கால நாள் ஒன்றில்
சோளகொள்ளை பாதையிலே
சேர்ந்து நாம் போகையிலே...
கொட்டியது மழை....
வெட்டியது மின்னல்...
ஒவ்வொரு மின்னலின் போதும்
உன் முகம் மின்னியது
மின்னலை விட பிரகாசமாய்...
பயத்தில் நீ அழ முயற்சிக்க
ஆறுதல் கூற வார்த்தைகள் தேடினேன்...
அழகாய் நீ சொன்னாய்
மின்னலும் இடியும்
உன்னிடமிருந்து என்னை
பிரித்துவிடும் என
பயத்தில் அழ முயன்றதாய்....
ஆழமான உன் காதலால்
அடிமையானேன்....
வீட்டோடு சிறைப்பட்டு
விடியவிடிய கண்ணீர்விட்டு
வேதனையில் நீ வெம்பியதை
அறிந்து துடித்து - பின்
கொட்டும் மழை சாரலிலும்
கோதை உன் முகம் கண்டு
ஆறுதல் கூறி ஆறுதல் பெற
நான் வந்த வேளையில்
நிகழ்ந்த ஒரு கொடுமை
நம் காதலை பிரித்தது...
என்னுயிரை காக்க நம் காதலை
தியாகம் செய்த தியாகி நீ....
மழைகாலம் - பிரிந்த
நம் காதலுக்கு
சாட்சியாக இன்னும்
அழுதுகொண்டுதான் உள்ளது...
இளமைகால மழை நாட்களை
மறக்க முடிவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக