எத்தனையோ காலங்கள்
காத்திருந்தேன் உனக்காக
கனியும் உன் மனமென!
காத்திருந்ததால் கரைந்தது
காலங்கள் மட்டுமே...
உன் கல் நெஞ்சமல்ல...
இனியும் காத்திருப்பதா?
காலத்தின் போக்கில்
சென்று கொண்டிருப்பதா?
எதுவும் சரியெனப்படவில்லை
உனக்காக காத்திருந்தது
குற்றம் எனப்புரிகிறது.
ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது...
வாழ்க்கையில் ஆசைப்பட்டது
எல்லாம் கிடைத்தது
உன் காதலை தவிர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக